டிராம்பேயில் 700 இ-சிகரெட்டுகள் பறிமுதல்

டிராம்பேயில் 700 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
மத்திய அரசு 2019-ம் ஆண்டு இ-சிகரெட் விற்பனை, தயாரிப்புக்கு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி இ-சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன. மும்பை டிராம்பே பகுதியில் இ-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இ-சிகரெட் விற்பனை செய்யப்படுவதுடன், ரிபில்லிங் செய்து கொடுப்பதும் தெரியவந்தது. போலீசார் அங்கு இருந்து 301 ரிபில்லிங் செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள், 402 காலி இ-சிகரெட்டுகள், 9 பேட்டரி சார்ஜர்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல மற்றொரு சம்பவத்தில் போலீசார் மஜ்காவ் பகுதியில் ரூ.9.20 லட்சம் மதிப்பிலான 46 கிராம் எம்.டி. போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். போதைப்பொருளுடன் சிக்கிய 24 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story






