ஒரேநாளில் 788 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி

மராட்டியத்தில் ஒரேநாளில் 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்றுக்கு ஒருவர் பலியானார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 10 ஆயிரத்து 59 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 788 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நோய் தொற்றுக்கு ஒருவர் பலியானார். மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இதுவரையில் 81 லட்சத்து 49 ஆயிரத்து 929 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 459 ஆகவும் அதிகரித்து உள்ளது.
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 211 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நகரில் தொடர்ந்து 6-வது நாளாக தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






