கொரோனா காலத்தில் பரோலில் வெளிவந்த 892 கைதிகள் தலைமறைவு- போலீசார் வலைவீச்சு


கொரோனா காலத்தில் பரோலில் வெளிவந்த 892 கைதிகள் தலைமறைவு- போலீசார் வலைவீச்சு
x

கொரோனா காலத்தில் பரோலில் இருந்து சிறையை விட்டு வெளியே சென்ற 892 கைதிகள் தலைமறைவானதால் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

கொரோனா காலத்தில் பரோலில் இருந்து சிறையை விட்டு வெளியே சென்ற 892 கைதிகள் தலைமறைவானதால் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பரோலில் வெளிவந்தனர்

நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டதால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 46 சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்து 241 கைதிகள் சிறைத்துறை ஜாமீனில் விடுவித்தது.

இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த மே மாதம் 1-ந்தேதி மாநிலத்தில் விதித்த அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக அதே மாதம் 4-ந்தேதி தற்காலிக பரோல் தொடர்பான உத்தரவை பிறப்பித்து தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும் சிறைக்கு திரும்புமாறு மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

892 கைதிகள்

இதில் திரும்பி வராதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியது. இதனை தொடர்ந்து பரோலில் வெளியே சென்ற விசாரணை கைதிகள், தண்டனை கைதிகளை போலீசார் கண்டறிந்து சுமார் 3 ஆயிரத்து 340 பேரை மீண்டும் சிறைக்கு அனுப்பினர். இருப்பினும் 892 கைதிகள் இன்னும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதில், பலர் கொலை மற்றும் கொள்ளை முயற்சி போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன்காரணமாக தலைமறைவான குற்றவாளிகள் மீது சிறைத்துறை 86 வழக்குகள் பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.


Next Story