மும்பை, நவிமும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் கைது

மும்பை, நவிமும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை, நவிமும்பை பகுதிகளில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த பிரஜைகள் தங்கி இருப்பதாக மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் நவிமும்பை நெரூல் பகுதியில் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிடிபட்டார். இவர் மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 2009-ம் ஆண்டைய வழக்கு ஒன்று தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் என தெரியவந்தது. இதேபோல வங்கதேசத்தை சேர்ந்த மேலும் 2 பேர் பிடிபட்டனர். இவர்களும் பலாத்கார வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து மும்பை பைகுல்லாவில் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர். மத்திய மும்பை பகுதியில் பதுங்கி இருந்த வங்கேதசத்தை சேர்ந்த மேலும் 2 பேர் பிடிபட்டனர். ஒரு வாரத்தில் நடத்திய அதிரடி நடவடிக்கையில் பிடிபட்ட வங்கதேசத்தை சேர்ந்த பெண் உள்பட 9 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.






