10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி- கொங்கன் மண்டலம் முதலிடம்


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி- கொங்கன் மண்டலம் முதலிடம்
x

மராட்டியத்தில் 10-ம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 96.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் 10-ம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 96.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

தேர்வு முடிவுகள்

மராட்டியத்தில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு நடந்தது.

மாநிலம் முழுவதும் 22 ஆயிரத்து 922 பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 68 ஆயிரத்து 977 பேர் தேர்வை எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 271 பேர் மாணவர்கள். 7 லட்சத்து 24 ஆயிரத்து 706 பேர் மாணவிகள்.

கொரோனா காரணமாக கூடுதலாக ½ மணி நேரம் பரீட்சை எழுத அனுமதிக்கப்படடனர்.

இந்தநிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியிடப்பட்டது.

சாதனை தேர்ச்சி

தேர்வு எழுதியதில் 96.94 சதவீதம் மாணவர்கள் சாதனை தேர்ச்சி பெற்றனர். மராட்டியத்தில் இதுவரை நடந்த தேர்வுகளில் அதிக தேர்ச்சி சதவீதம் இதுவாகும். இதில் மாணவர்கள் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 97.96 சதவீதமும் தேர்ச்சி பெற்று அசத்தினர்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சரியாக நடைபெறாத போதும், மாணவர்கள் தேர்வில் சாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை 96.94 சதவீதம்

இதேபோல கல்வி மண்டலங்களை பொறுத்தவரை, சிறிய மண்டலமான கொங்கனில் அதிகபட்சமாக 99.50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கோலாப்பூரில் 98.59 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 95.90 சதவீத தேர்ச்சியுடன் நாசிக் கடைசி இடத்தை பிடித்தது.

தானே, நவிமும்பை பகுதிகளை உள்ளடக்கிய மும்பை கல்வி மண்டலத்தில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 762 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 96.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தமிழ் மொழிப்பாடம்

மாநிலத்தில் கணிதத்தில் 97.82 சதவீதமும், சமூக அறிவியலில் 98.33 சதவீதமும், அறிவியலில் 98.08 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தமிழை மொழிப்பாடமாக எடுத்து 337 பேர் தேர்வு எழுதினர். இதில் 332 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல 6 லட்சத்து 50 ஆயிரத்து 779 மாணவர்கள் டிஸ்டிங்ஜனிலும், 5 லட்சத்து 70 ஆயிரத்து 27 மாணவர்கள் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 210 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது.

இதுதவிர 52 ஆயிரத்து 351 தனித்தேர்வர்களும் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 79.06 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்று உள்ளனர்.

1 More update

Next Story