சயானில் தட்டம்மைக்கு 6 மாத ஆண் குழந்தை பலி


சயானில் தட்டம்மைக்கு 6 மாத ஆண் குழந்தை பலி
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:54+05:30)

சயானில் தட்டம்மைக்கு 6 மாத ஆண் குழந்தை பலியானது.

மும்பை,

சயானில் தட்டம்மைக்கு 6 மாத ஆண் குழந்தை பலியானது.

6 மாத குழந்தை

மும்பையில் தட்டம்மை நோய் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக குடிசைப்பகுதிகளில் அதிகளவில் குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டாலும் உயிரிழப்புகள் தொடா்ந்து வருகிறது.

சயான் பகுதியை சேர்ந்த 6 மாத ஆண் குழந்தைக்கு கடந்த 4-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் குழந்தைக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டது.

பரிதாப சாவு

குழந்தை சிகிச்சைக்காக மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு குழந்தை வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குழந்தை சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தது.

மும்பையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டமைக்கு உயிரிழந்து உள்ளன. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 5 குழந்தைகள் தட்டம்மைக்கு பலியாகி உள்ளன.Next Story