பால்கர் உறைவிட பள்ளியில் 7 வயது மாணவிக்கு 'ஜிகா' வைரஸ்


பால்கர் உறைவிட பள்ளியில் 7 வயது மாணவிக்கு ஜிகா வைரஸ்
x

பால்கர் உறைவிட பள்ளியில் 7 வயது மாணவிக்கு ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

பால்கர் உறைவிட பள்ளியில் 7 வயது மாணவிக்கு 'ஜிகா' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உறைவிட பள்ளி

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் புதிய தலைவலியாக ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. பால்கர் மாவட்டம் தலசாரி தாலுகாவில் பழங்குடியின மாணவிகளுக்கான உண்டு உறைவிட பள்ளி உள்ளது.

இங்கு தங்கி படித்து வந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு தான் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜிகா வைரஸ்

புனேயில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு தற்போது இந்த கொடிய வைரஸ் சிறுமியை பாதித்துள்ளது.

ஜிகா வைரஸ் ஏடிஸ் வகை கொசு கடியால் பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி மற்றும் வெண்படல அழற்சி ஆகியவை இந்த வைரஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறியாகும்.

1 More update

Next Story