சட்டசபைக்கு 4 மாத குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ.


சட்டசபைக்கு 4 மாத குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரில் ஆளும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சரோஜ் அகிரே தனது 4 மாத ஆண் குழந்தையுடன் கூட்டத் தொடரில் பங்கேற்றார். அவர் நாக்பூாில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் குழந்தையுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை வளாகத்தில் குழந்தையுடன் வரும் பெண்களுக்கு வசதியாக சிறப்பு அறை இருப்பதாக விதான்சபா ஊழியர் கூறினார். எனினும் அந்த அறைகள் சுத்தமாக இல்லை என சரோஜ் அகிரே குற்றம்சாட்டினார்.

பா.ஜனதா எம்.எல். ஜெய்குமார் கோரே கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவர் ஊன்றுகோலுடன் சட்டசபைக்கு வருகை தந்தார்.

1 More update

Next Story