வீட்டின் மீது மின் கம்பிஅறுந்து விழுந்து தீ விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்


வீட்டின் மீது மின் கம்பிஅறுந்து விழுந்து தீ விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் மீது மின் கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

தானே,

வீட்டின் மீது மின் கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

மின் கம்பியால் தீ விபத்து

தானே மாவட்டம் மும்ரா, சிவாஜி நகர் தடி காலனி வழியாக செல்லும் உயரழுத்த மின் கம்பி நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென அறுந்து 2 வீடுகளின் மேல் விழுந்தது. இதன் காரணமாக வீடுகளில் தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் வீட்டில் எரிந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.

மும்பையில் சிகிச்சை

காயமடைந்த அலிமுதீன் செய்யது (35), சலாம் செய்யது (30), பாத்திமா (4), அலினா (5) சிகிச்சைக்காக கல்வா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மும்பையில் உள்ள கஸ்தூர்பா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின்கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்த சம்பவம் மும்ரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story