அமராவதியில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டது

அமராவதியில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
மும்பை,
அமராவதியில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
சரக்கு ரெயில் தடம் புரண்டது
மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மால்கேட் - டிம்மட்லா இடையே நேற்று முன்தினம் இரவு 11.20 மணியளவில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்று கொண்டு இருந்தது. இதில் திடீரென ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் நிலக்கரியுடன் இருந்த 20 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தரம்புரண்டன. தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் ஜே.சி.பி. எந்திரம், கிரேன் உதவியுன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில்கள் ரத்து
எனினும் விபத்து காரணமாக அந்த வழியில் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த வழியில் இயக்கப்பட இருந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதில் நாக்பூர் - சி.எஸ்.எம்.டி., சி.எஸ்.எம்.டி.- நாக்பூர், அமராவதி - நாக்பூர், நாக்பூர் - புனே, நாக்பூர் - சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட 13 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை - ஆமதாபாத் (12656), ஆமதாபாத் - சென்னை உள்ளிட்ட பல ரெயில்கள் மாற்றுவழியில் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர்.






