கணவரை கொன்று விடுவதாக மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது.

கணவரை கொன்று விடுவதாக மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
வசாய்,
பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் சக்பால். இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த 29 வயதுடைய திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி தனது வீட்டை காண்பிப்பதாக கூறி அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து உள்ளார். பின்னர் பெண்ணிடம் உனது கணவரை கொன்று விடுவதாக கூறி பலாத்காரம் செய்து உள்ளார். தனது செல்போனில் அப்பெண்ணின் ஆபாச வீடியோவை பதிவு செய்தார். தன்னிடம் உல்லாசமாக இருக்க மறுத்தால் இணையதளத்தில் ஆபாச படத்தை பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதே பாணியில் மிரட்டி அப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கணவரிடம் தெரிவித்தார். இருவரும் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் சக்பாலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






