போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் தப்பி ஓடிய விசாரணை கைதி


போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் தப்பி ஓடிய விசாரணை கைதி
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் தப்பியோடிய விசாரணை கைதி மீண்டும் போலீசில் சிக்கினார்.

வசாய்,

போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் தப்பியோடிய விசாரணை கைதி மீண்டும் போலீசில் சிக்கினார்.

திருட்டு வழக்கில் கைது

பயந்தர் மேற்கு பகுதியில் உள்ள சிவசேனா கல்லியை சேர்ந்தவர் ஹைபல் அலி(வயது27). இவரை காஷிமிரா போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்து இருந்தனர். சமீபத்தில் மற்றொரு திருட்டு வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் வாலிபரை கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வாலிபர் கைவிலங்குடன் பிடித்து வைக்கப்பட்டு இருந்தார். இரவு போலீஸ் நிலையத்தில் ஜெய்குமார் உள்பட 2 போலீஸ்காரர்கள் பணியில் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ஒரு போலீஸ்காரர் வெளியே சென்றார். ஜெய்குமார் திருட்டு வழக்கில் கைதான வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இருந்தார்.

கைவிலங்குடன் தப்பியோட்டம்

திடீரென அங்கு இருந்த இரும்பு கம்பியை எடுத்த வாலிபர், போலீஸ்காரர் ஜெய்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர் போலீஸ்காரரின் செல்போனை பறித்துவிட்டு கைவிலங்குடன் தப்பிசென்றார். சத்தம்கேட்டு வெளியில் சென்ற போலீஸ்காரர் வருவதற்குள், வாலிபர் இருளில் மறைந்து மாயமானார். இந்தநிலையில் மறுநாள் காலை சி.எஸ்.எம்.டி. பகுதியில் போலீசார் வாலிபரை கைது செய்தனர். போலீசார் அவர் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story