மாடியில் இருந்து பெண்ணை கீழே தள்ளி விட்ட காவலாளிக்கு வலைவீச்சு


மாடியில் இருந்து பெண்ணை கீழே தள்ளி விட்ட காவலாளிக்கு வலைவீச்சு
x

மலாடில் 20-வது மாடியில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கொல்ல முயன்ற காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 18-வது மாடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

மும்பை,

மலாடில் 20-வது மாடியில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கொல்ல முயன்ற காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 18-வது மாடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

கீழே தள்ளி விட்டார்

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 28-ந்தேதி காலை 9.45 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்றார். அந்த கட்டிடத்தில் காவலாளியாக வேலை பார்த்த வந்த அர்ஜூன் சிங் (35) என்பவர் பெண்ணிடம் மற்றொரு வீட்டில் புதிதாக வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதனை நம்பிய பெண், காவலாளியுடன் சென்றார். கட்டிடத்தின் 20-வது மாடிக்கு அழைத்து சென்ற போது திடீரென காவலாளி அப்பெண்ணை தாக்கி உள்ளார். பின்னர் 20-வது மாடியின் உயரத்தில் இருந்து அப்பெண்ணை கீழே தள்ளி விட்டார்.

உயிர் பிழைத்த பெண்

இதனால் அப்பெண் அதிர்ஷ்டவசமாக கீழே 18-வது மாடியில் இருந்த ஜன்னல் சிலாப்பில் விழுந்து உயிர்தப்பினார்.

பின்னர் இளம்பெண் உதவி கேட்டு சத்தம் போட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டனர். லேசான காயமடைந்த அப்பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் காவலாளி அர்ஜூன் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story