மிராரோட்டில் 15 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த வாலிபர் கைது

மிராரோட்டில் 15 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்தவர் சமீர்கான் (வயது19). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமியை பின்தொடர்ந்து பேச முயன்றார். இதனால் சிறுமி கண்டுகொள்ளாமல் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த சமீர்கான் உள்ளே நுழைந்தார். அங்கிருந்த சிறுமியை மிரட்டி கற்பழித்தார். அப்போது வீட்டிற்கு வந்த சிறுமியின் சகோதரி இதனை கண்டு சத்தம் போட்டாள். இதையடுத்து வாலிபர் சமீர்கான் அங்கிருந்து தப்பி சென்றார்.
சம்பவம் குறித்து போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சமீர்கானை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






