குர்லாவில் குடோன்களில் பயங்கர தீ விபத்து

குர்லாவில் குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை,
மும்பை குர்லா எல்.பி.எஸ். மார்க் அருகே குலாப் கல்லி பகுதியில் துணி குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை யாரும் கவனிக்காததால் துணியில் பற்றிய தீ மற்ற குடோன்களுக்கு பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் விரைந்து வந்தனர். இதன்பின்னர் குடோன்களில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 8 மணி நேரம் போராடி காலை 11.20 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 6 வணிக குடோன்களில் இருந்த துணிகள், மரப்பலகைகள், மரச்சாமான்கள், எலக்ட்ரிக் வயர்கள் என முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் யாரும் காயடையவில்லை என கூறிய போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






