தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வீடு புகுந்து திருடிய கொள்ளையன்- 3 பேர் கைது


தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வீடு புகுந்து திருடிய கொள்ளையன்- 3 பேர் கைது
x

வீடு புகுந்து திருடி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் தனது தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார்.

தானே,

வீடு புகுந்து திருடி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் தனது தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார்.

வீடு புகுந்து திருட்டு

டோம்பிவிலி திலக்நகர் பகுதியை சேர்ந்தவர் அமித். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் புனே சென்றிருந்தார். இதன்பின் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது பற்றி அமித் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒருவரின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து மும்பை காமாட்டிபுராவை சேர்ந்த அபிஜித் ராய் (வயது36) என்பவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

3 பேர் கைது

நகைபட்டறை வைத்து நடத்தி வந்த அபிஜித் ராய் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வீடு புகுந்து கொள்ளை அடித்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இவர் தனது 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து மும்பை, மிராபயந்தர், வசாய் போன்ற இடங்களில் கைவரிசை காட்டியதும், இதில் 13 வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் மான்காவில் பதுங்கி இருந்த இம்ரான் கான் (25), டோம்பிவியை சேர்ந்த ரியாஸ் கான் (36) ஆகிய 2 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள திருட்டு நகைகள், செல்போன், மோட்டார் சைக்கிள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.


Next Story