வாஷி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு


வாஷி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:45+05:30)

வாஷி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

வாஷி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மோட்டார் மேன் காப்பாற்றினார்.

தண்டவாளத்தில் பெண்

நவிமும்பை வாஷி ரெயில் நிலையத்திற்கு பன்வெலில் இருந்து மின்சார ரெயில் ஒன்று நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட போது சிறிது தொலைவில் தண்டவாளத்தில் 18 வயது இளம்பெண் நின்று கொண்டிருந்தார். ரெயில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சென்றபோது இளம்பெண் திடீரென தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.

இதனால் ரெயிலை இயக்கிய மோட்டார் மேன் பிரசாந்த் உடனடியாக அவசர பிரேக் போட்டு நிறுத்தினார்.

உயிர் பிழைத்தார்

இதனால் அப்பெண்ணின் அருகே ரெயில் சக்கரம் போய் நின்றது. இந்த சம்பவத்தில் அப்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மோட்டார் மேன் பிரசாந்த் அப்பெண்ணை மீட்டு அதே ரெயிலில் ஏற்றி உள்ளார். பின்னர் மான்கூர்டு ரெயில் நிலையம் வந்த பின்னர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. இருப்பினும் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story