மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்டிய ஆம் ஆத்மி தொண்டர்கள் கைது


மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்டிய ஆம் ஆத்மி தொண்டர்கள் கைது
x
தினத்தந்தி 22 Sep 2022 10:45 PM GMT (Updated: 22 Sep 2022 10:46 PM GMT)

புனே அருகே உள்ள பாராமதி தொகுதியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்டிய ஆம் ஆத்மி தொண்டர்கள் கைது

மும்பை,

நாடு முழுவதும் பா.ஜனதா பலவீனமாக உள்ள 144 நாடாளுமன்ற தொகுதிகளில் அந்த கட்சி கவனம் செலுத்தி வருகிறது. அந்த தொகுதிகளில் மத்திய மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் புனே அருகே உள்ள பாராமதி தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மராட்டியம் வந்த அவரது வாகனம் புனே வாஜ்ரே பகுதியில் சென்றது. அப்போது சாலையில் திரண்ட ஆம் ஆத்மி தொண்டர்கள் நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்டினர். பணவீக்கம், சரக்கு சேவை வரி ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி ஆம் ஆத்மி கட்சியின் புனே நகர செய்தி தொடர்பாளர் முகுந்த் கிர்தாட் கூறுகையில், "எங்களது கட்சி தொண்டர்கள் நிர்மலா சீதாராமன் வாகன அணிவகுப்பை நிறுத்த முயன்று, கருப்பு கொடி காட்டினர். பணவீக்கம், ஜி.எஸ்.டி. வரி பிரச்சினைகளில் எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.


Next Story