மும்பை விமான நிலையத்தில் இருந்து தென்மும்பை, நவிமும்பை, தானேக்கு ஏ.சி. பஸ் சேவை


மும்பை விமான நிலையத்தில் இருந்து தென்மும்பை, நவிமும்பை, தானேக்கு ஏ.சி. பஸ் சேவை
x
தினத்தந்தி 25 Sep 2022 5:15 AM GMT (Updated: 2022-09-25T10:45:12+05:30)

மும்பை விமான நிலையத்தில் இருந்து தென்மும்பை, நவிமும்பை, தானேக்கு ஏ.சி. பஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் இருந்து தென்மும்பை, நவிமும்பை, தானேக்கு ஏ.சி. பஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏ.சி. பஸ் சேவை

மும்பையில் விமானப்பயணிகளின் வசதிக்காக பெஸ்ட் நிர்வாகம் ஏ.சி. பஸ் சேவைகளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பஸ்கள் பயணிகளின் வசதிக்காக மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வாசல் வரை இயக்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு விமான நிலையத்துக்கும் இயக்கப்படும். முதல் கட்டமாக இந்த பஸ்கள் சர்வதேச விமான நிலையம் - பேக்பே பஸ் டெப்போ (தென்மும்பை), சர்வதேச விமான நிலையம் - ஜல்வாயு விகார் கார்கர் (நவிமும்பை), சா்வதேச விமான நிலையம் - கேட்பரி ஜங்ஷன் (தானே) ஆகிய 3 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பயணிகளின் லக்ஜேஜிக்கு எந்த கட்டணமும் கிடையாது.

இருக்கை முன் பதிவு

மேலும் ஏ.சி. பஸ் சேவை குறித்து பெஸ்ட் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா கூறுகையில், " இந்த பஸ் சேவை 24 மணி நேரமும் இயக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும். பஸ் வந்து சேரும் நேரம், புறப்படும் நேரம் குறித்து விமானப்பயணிகள் 'சலோ' செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் அவர் செயலி மூலமாக இருக்கை கூட முன்பதிவு செய்து கொள்ள முடியும். பொது மக்கள் ஆட்டோ, டாக்சிகளுக்கு அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்வதை விட ஏ.சி. பஸ்களில் குறைந்த கட்டணத்தில் சவுகரியமாக பயணம் செய்ய முடியும் " என்றார்.


Next Story