பிரேக் பழுதானதால் விபத்து; அரசு பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் காயம்


பிரேக் பழுதானதால் விபத்து; அரசு பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 26 July 2023 12:45 AM IST (Updated: 26 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

புல்தானாவில் பிரேக் பழுதானதால் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

மும்பை,

புல்தானாவில் பிரேக் பழுதானதால் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

பிரேக் பழுதானது

புல்தானா மாவட்டம் மல்காப்பூரில் இருந்து புல்தானா நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை 9.45 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 56 பயணிகள் இருந்தனர். ராஜூர்காட் என்ற மலைப்பகுதியில் பஸ் சென்றபோது திடீரென பிரேக் பழுதானது. இதனால் பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் சாலை ஓரமாக திருப்பினார். ஆனால் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

10 பயணிகள் காயம்

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 10 பயணிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டனர். காயமடைந்த 10 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு மற்ற பயணிகளை போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story