புனேயில் ரூ.65 லட்சம் செல்போன்கள் திருடிய ஆசாமி மும்பையில் சிக்கினார்


புனேயில் ரூ.65 லட்சம் செல்போன்கள் திருடிய ஆசாமி மும்பையில் சிக்கினார்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:30 AM IST (Updated: 31 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் ரூ.65 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய ஆசாமி மும்பையில் கைது செய்யப்பட்டார்

புனே,

புனே மாவட்டம் வாகோலி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து அங்கிருந்த விலையுயர்ந்த 105 செல்போன்களை திருடி சென்றார். இவற்றின் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். இது குறித்து லோனிகண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் குடோனில் செல்போன் திருடிய ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. இவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தோபாஜூல் குர்ஷித் சேக் எனவும், அவர் மும்பையில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அவரை பிடிக்க நடத்திய விசாரணையில் மஜித்பந்தர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று தோபாஜூல் குர்ஷித் சேக்கை கைது செய்தனர். பின்னர் லோனிகண்ட் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.


Next Story