மேற்கு ரெயில்வேயில் கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை- அதிகாரி தகவல்


மேற்கு ரெயில்வேயில் கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை- அதிகாரி தகவல்
x

மேற்கு ரெயில்வேயில் கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மும்பை,

மேற்கு ரெயில்வேயில் கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கூடுதல் சேவை

மும்பையில் கடந்த மே மாதம் புறநகா் ஏ.சி. மின்சார ரெயில் டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டது. இதையடுத்து ஏ.சி. மின்சார ரெயில்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு ரெயில்வேயில் கடந்த ஏப்ரல் மாதம் தினந்தோறும் 22 ஆயிரம் பேர் ஏ.சி. மின்சார ரெயிலில் பயணம் செய்தனர். ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 800 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் மேற்கு ரெயில்வேயில் கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் மேற்கு ரெயில்வேயில் கூடுதலாக 8 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

5-வது ஏ.சி. ரெயில்

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " 5-வது ஏ.சி. ரெயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நாம் கூடுதலாக 8 சேவைகளை இயக்க முடியும். இதில் காலை 7.30 மணிக்கு விராரில் இருந்தும், காலை 9.48 மணிக்கு போரிவிலியில் இருந்தும், மாலை 6.35 மணிக்கு சர்ச்கேட்டில் இருந்தும் புதிய சேவையை அறிமுகம் செய்ய உள்ளோம்" என்றார்.

தற்போது மேற்கு ரெயில்வேயில் வேலை நாட்களில் 40 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளும், ஞாயிறுதோறும் 32 சேவைகளும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story