ஓடும் ரெயிலில் இருந்து குதித்த விசாரணை கைதி பலி


ஓடும் ரெயிலில் இருந்து குதித்த விசாரணை கைதி பலி
x

உத்தரபிரதேசத்தில் போலீசாரிடம் பிடிபட்ட வாலிபரை ரெயிலில் அழைத்து வந்த போது மான்மாட் அருகே ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பலியாகினார்.

நாசிக்,

உத்தரபிரதேசத்தில் போலீசாரிடம் பிடிபட்ட வாலிபரை ரெயிலில் அழைத்து வந்த போது மான்மாட் அருகே ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பலியாகினார்.

உத்தரபிரதேசத்தில் சிக்கினார்

மும்பை காந்திவிலி போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக தபரேத் (வயது30) என்பவரை தேடி வந்தனர். இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 18-ந்தேதி தனிப்படை போலீசார் அவரை பிடிக்க உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்றனர்.

அங்கு உள்ளூர் போலீசாரின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 19-ந்தேதி நள்ளிரவு 2 மணி அளவில் பல்ராம்பூர் பகுதியில் பதுங்கி இருந்த தபரேத் போலீசாரின் பிடியில் சிக்கினார்.

ரெயிலில் அழைத்து வந்த போலீசார்

இவரை விசாரணைக்காக மும்பைக்கு 20-ந்தேதி காலை 9.30 மணி அளவில் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அழைத்து வந்தனர். 21-ந்தேதி காலை 5 மணி அளவில் ரெயில் மான்மாட் ரெயில் நிலையம் அருகே வந்த போது தபரேத் கழிவறை செல்ல வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இதன்படி போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது ரெயில் மிதமான வேகத்துடன் சென்றதால் தபரேத் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க திட்டம் போட்டார்.

வாலிபர் பலி

உடனடியாக அருகே நின்ற போலீசாரை தள்ளி விட்டு தபரேத் ஓடும் ரெயிலில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதனால் உடன் நின்ற போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். இதையடுத்து மன்மாட் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது போலீசார் இறங்கி அவரை தேடும் பணியில் இறங்கினர். போலீசார் தேடிய போது தண்டவாளம் ஓரமாக தலையில் பலத்த காயத்துடன் தபரேத் பிணமாக கிடந்தது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story