''நண்பனை போல அணுகி, அப்சல் கான் போல கட்டி அணைக்கிறது'' - பா.ஜனதா குறித்து பச்சு கடு விமர்சனம்


நண்பனை போல அணுகி, அப்சல் கான் போல கட்டி அணைக்கிறது - பா.ஜனதா குறித்து பச்சு கடு விமர்சனம்
x
தினத்தந்தி 7 Oct 2023 1:15 AM IST (Updated: 7 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

‘‘நண்பனை போல அணுகி, அப்சல் கான் போல கட்டி அணைக்கிறது'' என பா.ஜனதா குறித்து அதன் கூட்டணியில் உள்ள முன்னாள் மந்திரி பச்சு கடு விமர்சித்து உள்ளார்.

மும்பை,

''நண்பனை போல அணுகி, அப்சல் கான் போல கட்டி அணைக்கிறது'' என பா.ஜனதா குறித்து அதன் கூட்டணியில் உள்ள முன்னாள் மந்திரி பச்சு கடு விமர்சித்து உள்ளார்.

பச்சு கடு அதிருப்தி

பிரகார் ஜனசக்தி கட்சி எம்.எல்.ஏ. பச்சு கடு. இவர் உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்தார். ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்த போது, அவருக்கு ஆதரவாக சென்றார். ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என பச்சு கடு எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்கவில்லை. தற்போது தேசியவாத காங்கிரசும் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்து உள்ளதால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, பச்சு கடுவின் அச்சல்புர் தொகுதியில் கவனம் செலுத்துமாறு பா.ஜனதா எம்.பி. அனில் போன்டேவிடம் கூறியதாக தெரிகிறது. இது பச்சு கடுவுக்கு பா.ஜனதா மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதா குறித்து விமர்சனம்

இந்தநிலையில் அவர் கூட்டணி கட்சியான பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் ஹிங்கோலியில் கூறியதாவது:- பா.ஜனதா எங்களை நண்பனை போல அணுகியது. ஆனால் தற்போது அப்சல் கானை போல கட்டி அணைக்கிறது. இது நல்லதல்ல. கூட்டணி கட்சியின் மன உறுதியை குலைக்கும் செயலை பா.ஜனதா வேண்டும் என்றே செய்கிறது. நீங்கள் ஒருபுறம் அதிகம் பேரை கூட்டணியில் சேர்த்து கொள்கிறீர்கள். சேர்ந்த பிறகு கூட்டணி கட்சியை இதுபோல நடத்துகிறார்கள். இது யாருக்கும் நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story