மாநகராட்சி உதவி கமிஷனர் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்


மாநகராட்சி உதவி கமிஷனர் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தானே,

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜித்தேந்திரா அவாத்தின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தானே மாநகராட்சி உதவி கமிஷனர் மகேஷ் அகிர் பேசிய ஆடியோ கிளிப் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது பற்றி அறிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த உதவி கமிஷனர் மகேஷ் அகிரை பிடித்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் விரைந்து சென்று அதிகாரியை மீட்டனர். காயம் அடைந்த அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story