தானேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை


தானேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை
x

தானேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

மாவட்ட செய்திகள்

தானே,

தானேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஏ.டி.எம். சேதம்

தானே கோட்பந்தர் சாலை காசர்வட்வலி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று காலை 7 மணி அளவில் வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

அப்போது எந்திரம் சேதப்படுத்தி இருந்ததை கண்டு சம்பவம் குறித்து போலீசில் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொள்ளை

தகவல் அறிந்த வங்கி மேலாளர் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். அப்போது எந்திரத்தை சேதப்படுத்தி அதில் இருந்த ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்தை மர்மஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு நடத்தி கொள்ளையடித்த நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story