கொங்கன் மண்டலத்தில் 31-ந் தேதி முதல் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தம்

கொங்கன் மண்டலத்தில் 31-ந் தேதி முதல் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி முதல் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

தானே,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி முதல் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வேலை நிறுத்தம்

கொங்கன் மண்டலத்தில் வருகிற 31-ந் முதல் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.

கொங்கன் மண்டலத்தில் தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுா்க் மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2½ லட்சம் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கட்டண உயர்வு

இதுகுறித்து கொங்கன் ஆட்டோ, டாக்சி சங்க தலைவர் பிரனாவ் பென்கர் கூறுகையில், "டாக்சி, ஆட்டோ டிரைவர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு மாநில அரசு செவி சாய்க்காமல் உள்ளது. எனவே நாங்கள் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

சி.என்.ஜி. விலை உயர்ந்து உள்ளதால் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் முக்கிய கோரிக்கை ஆகும். மாநில அரசு ஏற்கனவே அதிகளவில் ஆட்டோ உரிமங்களை வழங்கிவிட்டது. எனவே அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஆட்டோ உரிமம் வழங்கப்பட கூடாது." என்றார்.

----

1 More update

Next Story