அனில் தேஷ்முக்கின் முன்னாள் செயலாளருக்கு ஜாமீன்


அனில் தேஷ்முக்கின் முன்னாள் செயலாளருக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:38+05:30)

மும்பை,

மும்பையில் ஒட்டல்கள் மற்றும் பார்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு போலீசாருக்கு உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் உத்தரவிட்டதாக முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக்கின் முன்னாள் தனி செயலாளர் சஞ்சீவ் பலண்டேவை கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இவர் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் சார்பாக போலீஸ் அதிகாரியான சச்சின் வாசேவிடம் பேசி பணம் வசூலிக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சஞ்சீவ் பலண்டே ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டை அணுகினார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி எம்.எஸ். கார்னிக், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதே வழக்கில் கைதான முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story