பிரதமர் மோடி வருகையையொட்டி மும்பையில் டிரோன், குட்டி விமானங்கள் பறக்க தடை


பிரதமர் மோடி வருகையையொட்டி மும்பையில் டிரோன், குட்டி விமானங்கள் பறக்க தடை
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மும்பையில் வருகிற 10-ந் தேதி டிரோன், குட்டிவிமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மும்பையில் வருகிற 10-ந் தேதி டிரோன், குட்டிவிமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிரோன்களுக்கு தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந் தேதி மும்பை வர உள்ளார். அவர் சி.எஸ்.எம்.டி.- சோலாப்பூர், சி.எஸ்.எம்.டி. - ஷீரடி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மோடி வருகையையொட்டி மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மோடி வருகையையொட்டி மும்பையில் வருகிற 10-ந் தேதி டிரோன் உள்ளிட்ட சிறிய ரக பறக்கும் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகள்?

இது தொடர்பாக மும்பை போலீசார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

"பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி மும்பை வரும் நிலையில் அன்றை தினம் பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பை விமான நிலையப்பகுதி, கொலபா, மாதா ரமாபாய் அம்பேத்கர் மார்க், எம்.ஐ.டி.சி., அந்தேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள், மரோல், ஐ.என்.எஸ். சிக்ரா, சி.எஸ்.எம்.டி. ஆகிய பகுதிகளில் டிரோன், பாராகிளைடர், பலூன், ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி விமானம் ஆகியவை பறக்க விட தடைவிதிக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story