பேலாப்பூர்- பெந்தார் இடையே விரைவில் மெட்ரோ ரெயில் சேவை - சிட்கோ தகவல்


பேலாப்பூர்- பெந்தார் இடையே விரைவில் மெட்ரோ ரெயில் சேவை - சிட்கோ தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2023 1:15 AM IST (Updated: 22 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பேலாப்பூர்- பெந்தார் இடையே விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என சிட்கோ தெரிவித்துள்ளது.

தானே,

பேலாப்பூர்- பெந்தார் இடையே விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என சிட்கோ தெரிவித்துள்ளது.

வழித்தட பணி நிறைவு

நவிமும்பையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணியை நகர மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கழகம் (சிட்கோ) செய்து வருகிறது. இதன் முதல் கட்டமாக பேலாப்பூர் முதல் பெந்தார் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கான 11.1 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் பாதையின் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இந்த பாதையில் மொத்தம் 11 ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

விரைவில் சேவை

இதுகுறித்து சிட்கோ துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனில் டிக்கிகர் கூறியதாவது:- மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நவிமும்பை மெட்ரோ சேவை பல தடைகளை தாண்டி விரைவில் தொடங்க இருக்கிறது. மகா மெட்ரோ இந்த மெட்ரோவின் ஆபரேட்டராக நியமிக்கப்பட்டுள்ளது. கட்டணமும் விரைவில் முடிவு செய்யப்படும். பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story