2 நாளில் வழக்கம் போல பெஸ்ட் பஸ்கள் ஓடும் - மந்திரி மங்கல் பிரபாத் லோதா தகவல்


2 நாளில் வழக்கம் போல பெஸ்ட் பஸ்கள் ஓடும் - மந்திரி மங்கல் பிரபாத் லோதா தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

2 நாளில் வழக்கம் போல பெஸ்ட் பஸ்கள் இயக்கப்படும் என மும்பை பொறுப்பு மந்திரி மங்கல் பிரதாப் லோதா கூறியுள்ளார்.

மும்பை,

2 நாளில் வழக்கம் போல பெஸ்ட் பஸ்கள் இயக்கப்படும் என மும்பை பொறுப்பு மந்திரி மங்கல் பிரதாப் லோதா கூறியுள்ளார்.

6-வது நாளாக போராட்டம்

மும்பையில் மின்சார ரெயில்களுக்கு அடுத்து, பொது மக்கள் அதிகமாக பெஸ்ட் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். பெஸ்ட் பஸ்களில் தினந்தோறும் சுமார் 30 லட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பெஸ்ட் தனியார் ஒப்பந்த பஸ் டிரைவர்கள் கடந்த புதன்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக தனியார் ஒப்பந்த பஸ் டிரைவர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதன்காரணமாக நேற்று 796 தனியார் ஒப்பந்த பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் பஸ் நிறுத்தங்களில் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.

மந்திரி பேட்டி

இந்த நிலையில் வேலை நிறுத்தம் குறித்து நேற்று மும்பை மாவட்ட பொறுப்பு மந்திரி மங்கல் பிரதாப் லோதா கூறியதாவது:- வேலை நிறுத்தம் தொடர்பான பிரச்சினையில் மாநில அரசு அலட்சியமாக இல்லை. பொது மக்கள் பாதிக்கப்படாததை உறுதி செய்வது தான் அரசின் கொள்கை முடிவு. அதே நேரத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதும் உறுதி செய்யப்படும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

2 நாளில் வழக்கம் போல சேவை

பெஸ்ட் விரைவில் அனைத்து பஸ்களையும் இயக்கும். பாதிக்கப்பட்ட பஸ் சேவை அடுத்த 2 நாளில் சரி செய்யப்படும். பெஸ்ட் சார்பில் 3 ஆயிரத்து 352 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 1,381 பெஸ்டால் இயக்கப்படுகிறது. 1,671 தனியார் ஒப்பந்த நிறுவன பஸ்கள் இயக்கப்படுகின்றன. போராட்டத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க 3 ஆயிரத்து 52 பஸ்சில் 2 ஆயிரத்து 651 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. 180 எஸ்.டி. பஸ்களும், 200 பள்ளிக்கூட பஸ்களும் பெஸ்ட் சேவைக்காக இயக்கப்பட்டது. 400 பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டு வருகிறது. அதை இயக்க தேவையான டிரைவர்களை தேடி வருகிறோம். போராட்டத்துக்கு பிறகு தனியார் ஒப்பந்த நிறுவன பஸ் உரிமையாளர்களை சந்தித்து பேசினோம். அரசு சார்பில் ஊழியர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியம், தீபாவளி போனஸ், அடிப்படை வசதி போன்றவற்றை நிறைவேற்ற உத்தரவிட்டு உள்ளோம். மேலும் இது தொடர்பாக மீண்டும் ஒரு முறை சந்தித்து பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story