பட்னாவிஸ் ஒரு 'மாஸ்டர் பிளாஸ்டர்' - உத்தவ் தாக்கரேக்கு ஷிண்டே பதிலடி


பட்னாவிஸ் ஒரு மாஸ்டர் பிளாஸ்டர் - உத்தவ் தாக்கரேக்கு ஷிண்டே பதிலடி
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்ஸ், போர் விளாசவும், விக்கெட் எடுக்கவும் தெரிந்த ‘மாஸ்டர் பிளாஸ்டர்' தேவேந்திர பட்னாவிஸ் என உத்தவ் தாக்கரேக்கு ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்து உள்ளார்.

மும்பை,

சிக்ஸ், போர் விளாசவும், விக்கெட் எடுக்கவும் தெரிந்த 'மாஸ்டர் பிளாஸ்டர்' தேவேந்திர பட்னாவிஸ் என உத்தவ் தாக்கரேக்கு ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்து உள்ளார்.

உத்தவ் தாக்கரே விமர்சனம்

முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சி தொண்டர்கள், சம்பாஜி பிரிகேட் அமைப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை 'மஸ்டர் மினிஸ்டர்' (ஆள் சேர்க்கும் மந்திரி) என விமர்சித்து இருந்தார். மேலும், "பா.ஜனதா மற்ற கட்சிகளில் இருந்து விலகி வரும் நபர்களின் கட்சியாக மாறி உள்ளது. அப்படி மாறி வருபவர்களை வணங்க வேண்டிய பா.ஜனதா கட்சிக்காரர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்" எனவும் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே பதிலடி

உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு புனே ஜெஜூரியில் நடந்த அரசு விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்தபோது, அவர் எந்த வேலையும் செய்ய முடியாது என கூறமாட்டார். நான் அதற்கு சாட்சி. அவர் எல்லா வேலையும் செய்தார். அவர் ஒரு 'மாஸ்டர் பிளாஸ்டர்'. அவருக்கு சிக்சர், போர்களை விளாசவும் தெரியும், விக்கெட் எடுக்கவும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story