ஓஷிவாரா குடிசை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு
ஓஷிவாரா குடிசை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூக்கில் தொங்கியபடி இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது
மும்பை,
மும்பை ஓஷிவாரா பெக்ராம்பாக் குடிசை பகுதியை சேர்ந்த இளம்பெண் சாகின் பர்வீன் (வயது20). சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். இதற்கு பதில் இல்லாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சாகின் பர்வீன் தூக்கு போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்க்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் இளம்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரின் வீட்டில் நடத்திய சோதனையில் கடிதம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவர் உயிரிழந்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.