மும்பையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் படுகாயம்- சிகிச்சையில் கால் துண்டிக்கப்பட்டது


மும்பையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் படுகாயம்- சிகிச்சையில் கால் துண்டிக்கப்பட்டது
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாகிம்-பாந்திரா இடையே ரெயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் படுகாயம் அடைந்தான். சிகிச்சையின் போது உயிரை காப்பாற்ற அவனது கால் துண்டிக்கப்பட்டது.

மும்பை,

மாகிம்-பாந்திரா இடையே ரெயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் படுகாயம் அடைந்தான். சிகிச்சையின் போது உயிரை காப்பாற்ற அவனது கால் துண்டிக்கப்பட்டது.

தவறி விழுந்த சிறுவன்

மும்பை மாகிம் பகுதியை சேர்ந்த சிறுவன் பர்கான் (வயது12). உடல் நலக்குறைவு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். இதனால் பாடங்கள் எழுதுவதற்காக பாந்திராவை சேர்ந்த நண்பரிடம் பாடபுத்தங்கள் வாங்க மாகிமில் இருந்து பாந்திராவிற்கு மின்சார ரெயிலில் புறப்பட்டு சென்றான். அப்போது ரெயிலில் சென்றபோது பிடிநழுவி தண்டவாளத்தில் விழுந்தான். இதனால் பர்கானின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ரெயில்வே போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிறுவனை மீட்டு பாந்திரா ரெயில் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பாபா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கால் துண்டிப்பு

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவனது உயிரை காப்பாற்ற ஒரு கால் துண்டிக்கப்பட்டது.

இது குறித்த சயான் ஆஸ்பத்திரி எலும்பு முறிவு டாக்டர் அரவிந்த் கூறுகையில், "சிறுவனின் காலை காப்பாற்ற முடியவில்லை. ரத்த நாளங்கள் சிதையாமல் இருந்திருந்தால் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் மீண்டும் மூட்டுகளில் இணைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக சிறுவனின் காலை மீண்டும் இணைக்க சாத்தியகூறுகள் இல்லாமல் போய் விட்டது. சிறுவனின் உடல் நிலை சீரானவுடன் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவான்" என்றார்.

1 More update

Next Story