ஒரே மாதத்தில் பைகுல்லா பூங்காவுக்கு ரூ.1½ கோடி வருவாய்


ஒரே மாதத்தில் பைகுல்லா பூங்காவுக்கு ரூ.1½ கோடி வருவாய்
x

பைகுல்லா பூங்காவுக்கு ஒரே மாதத்தில் ரூ.1½ கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

பைகுல்லா பூங்காவுக்கு ஒரே மாதத்தில் ரூ.1½ கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

ரூ.1½ கோடி வருவாய்

மும்பை பைகுல்லாவில் உள்ள ராணி உயிரியல் பூங்காவில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இதேபோல பென்குயின்களும் உள்ளன. இந்தநிலையில் கடந்த மாதம் கோடை விடுமுறை காரணமாக பைகுல்லா பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பல பள்ளிகள் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து வந்தனர்.

இதன் காரணமாக கடந்த மாதம் மட்டும் உயிரியல் பூங்காவுக்கு நுழைவு கட்டணம் மூலம் ரூ.1½ கோடி வருவாய் கிடைத்து உள்ளது. பூங்காவுக்கு ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை வருவாயாக கிடைத்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

பைகுல்லா பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25-யும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

புலியை பார்த்து ரசித்தனர்

கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பார்வையாளர்கள் வருகை தந்தது குறித்து உயிரியல் பூங்கா இயக்குனர் சஞ்சய் திரிபாதி கூறுகையில், "பார்வையாளர்கள் அதிகளவில் வந்ததால், பாதுகாப்பையும் அதிகரித்தோம். சில ஜேப்படி சம்பவம் நடந்ததால் சாதாரண உடையில் மாநகராட்சி ஊழியர்களும் பூங்காவில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நல்ல அனுபவத்துடன் திரும்ப வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இங்குள்ள சக்தி, கரிஷ்மா புலிகள் தண்ணீரில் நீந்துவதை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். அங்கு தான் எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்தது" என்றார்.


Next Story