கர்ப்பிணி பெண் பலியான வழக்கில்- 2 டாக்டர்கள் மீது வழக்கு


கர்ப்பிணி பெண் பலியான வழக்கில்- 2 டாக்டர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தானே,

தானே மாவட்டம் பிவண்டி வாட்பே கிராமத்தை சேர்ந்த 31 வயதுடைய நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் தெம்கர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்பெண் கடந்த 25-ந்தேதி உயிரிழந்தார். இது பற்றி அறிந்த பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அப்பெண் பலியான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சிகிச்சை அளிக்கப்பட்ட ஆஸ்பத்திரி கடந்த 2019-ம் ஆண்டு முதல் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஒருவருக்கு மருத்துவ சான்றிதழ் இன்றி மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் படி போலீசார் 2 டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரையில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், ஆஸ்பத்திரியை சீல் வைக்கும் நடவடிக்கை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story