ரூ.22 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு

ரூ.22 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பால்கர் மாவட்டம் வசாய், சந்தோர் பகுதியில் மாநில மின் பகிர்மான நிறுவன பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு காம்பவுண்டில் இருந்த வீடுகளில் மின் மீட்டர் சேதப்படுத்தப்பட்டு, மின் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வீடுகளின் உரிமையாளர் 2011-ம் ஆண்டு மார்ச் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் வரை ரூ.22.42 லட்சம் மதிப்பிலான 97 ஆயிரத்து 686 யூனிட் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக மின் நிறுவன அதிகாரிகள் வசாய் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மின் திருட்டில் ஈடுபட்ட வீடுகளின் உரிமையாளர்களான தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






