நவாப் மாலிக் மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு

மும்பை,
தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் முன்னாள் மந்திரி நவாப் மாலிக். இவரது மகன் பராஸ். இவர் வெளிநாட்டை சேர்ந்த 2-வது மனைவி லாரா ஹம்லீனின் விசாவை புதுபிக்க விண்ணப்பித்து இருந்தார். அவர் தாக்கல் செய்த ஆவணங்களை மண்டல பதிவு அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பராஸ் தாக்கல் செய்த திருமண சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலக அதிகாரிகள் குர்லா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நவாப் மாலிக் மகன் பராஸ், அவரது மருமகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நவாப் மாலிக் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






