பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் நாடாளுமன்றத்துடன் சேர்த்து சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு- அஜித்பவார் கணிப்பு

பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலுடன் மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலுடன் மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.
அஜித்பவார் கருத்து
மராட்டிய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் பெண்கள், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியதாவது:-
பட்ஜெட் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதை காட்டி உள்ளது. அதிகபட்சமாக அவர்கள் சட்டசபை தேர்தலை, நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவார்கள் என்பது தெரிகிறது. நான் நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். எனவே காற்று எதை நோக்கி வீசுகிறது என்பது எனக்கு தெரியும். பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டம் எதுவுமில்லை.
புஸ்வானம்
தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து உள்ள திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. பட்னாவிசுக்கு நிதித்துறை கொடுக்கப்பட்ட போது, நீண்ட காலத்துக்கு பிறகு மராட்டியத்துக்கு தேர்ந்த நிதித்துறை மந்திரி கிடைத்து இருக்கிறார் என நினைத்தேன். ஆனால் தற்போது அது புஸ்வானம் ஆகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






