மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் சேவை நேரம் மாற்றம்


மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் சேவை நேரம் மாற்றம்
x

5 மணி நேரம் பராமரிப்பு பணி காரணமாக மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் சேவை நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பை மேற்கு ரெயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சர்ச்கேட் முதல் மும்பை சென்ட்ரல் இடையிலான ஸ்லோ வழித்தடத்தில் தண்டவாளம், சிக்னல், உயர்மின் அழுத்த கம்பிகளின் பராமரிப்பு பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.35 மணி அளவில் தொடங்கி சுமார் 5 மணி நேரம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஸ்லோ வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்கள் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும். ஓரிரு சில மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை சம்பந்தப்பட்ட ஸ்டேசன் மாஸ்டரை பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story