திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை- முதல்-மந்திரி ஷிண்டே கருத்து


திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை-  முதல்-மந்திரி ஷிண்டே கருத்து
x

திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

எம்.பி. கடிதம்

நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார்.

இந்தநிலையில் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே, கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். சிவசேனா மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்கு பெருமை

இந்தநிலையில் ராகுல் செவாலே, உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதம் குறித்து நேற்று தானேயில் சிவசேனா அதிருப்தி அணி தலைவரும், முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

திரவுபதி முர்மு நாட்டின் ஜனாதிபதியாக பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்து உள்ளார். அவர் நாட்டின் ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை மற்றும் கவுரவம் ஆகும். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதால் நானும் பெருமை அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story