12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணி அளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணி அளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு

மராட்டியத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி முதல் மார்ச் 21-ந் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை 14 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 33 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் காத்திருந்தனர்.

முடிவு இன்று வெளியீடு

இந்தநிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணி அளவில் வெளியாகும் என்று மாநில இடைநிலை மற்றும் உயர்நிலைக்கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் mahahsscboard.in மற்றும் mahresult.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story