விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்


விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

ராய்காட் பஸ் விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், "ராய்காட்டில் நடந்த பஸ் விபத்து வேதனை அளிக்கிறது. விபத்தில் தனது குடும்பத்தினர், நண்பர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்து.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ராய்காட்டில் நடந்த விபத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை போனில் தொடர்பு விபத்து குறித்து கேட்டறிந்தார்.

1 More update

Next Story