மங்களூருவில் சிவாஜி சிலை வைக்க காங்கிரஸ் எதிர்ப்பு


மங்களூருவில் சிவாஜி சிலை வைக்க காங்கிரஸ் எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் சத்ரபதி சிவாஜி சிலை வைக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மும்பை,

கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகராட்சி கூட்டம் கடந்த அக்டோபர் 29-ந் தேதி நடந்தது. கூட்டத்தில் மங்களூரு மகாவீர் சர்க்கிள் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை வைக்க மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில் கடந்த புதன்கிழமை மாநகராட்சி கூட்டம் நடந்த போது, காங்கிரசை சேர்ந்த மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நவீன் டிசோசா மங்களூருவில் சத்ரபதி சிவாஜி சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்தார். மராட்டிய அமைப்பான மகராஷ்டிரா ஏகீகரன் சமிதி கர்நாடகாவுக்கு எதிராக இருப்பதாக கூறி அவர் சிவாஜி சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்து தலைவர்களுக்கு எதிராக செயல்படுவதை காங்கிரஸ் பழக்கமாக வைத்து இருப்பதாக பா.ஜனதா கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story