மராட்டியத்தில் புதிதாக 326 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் புதிதாக 326 பேருக்கு கொரோனா
x

மராட்டியத்தில் புதிதாக 326 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் இன்று புதிதாக 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 82 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிககை 1 லட்சத்து 47 ஆயிரத்து 856 ஆக தொடர்கிறது.

இன்று மட்டும் 251 பேர் தொற்றில் இருந்து விடுபட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 77 லட்சத்து 33 ஆயிரத்து 43 ஆக உயர்ந்தது. தற்போது மாநிலத்தில் 1,903 பேர் சிகிச்சையில் உ்ள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார்.

மும்பையில் மட்டும் புதிதாக 234 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நகரில் இதுவரை 19 ஆயிரத்து 566 பேர் தொற்றுநோய்க்கு உயிரிழந்துள்ளனர்.

151 பேர் குணமானதன் மூலம், மும்பையில் நோயில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 42 ஆயிரத்து 48 ஆக உள்ளது. தற்போது நகரில் 1,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

-----


Next Story