மராட்டியத்தில் புதிதாக 4,255 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் புதிதாக 4,255 பேருக்கு கொரோனா
x

மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 255 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 255 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

4,255 பேர் பாதிப்பு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 255 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 2 பேர் வைரஸ் நோய்க்கு பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை 79 லட்சத்து 23 ஆயிரத்து 697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 லட்சத்து 55 ஆயிரத்து 183 பேர் குணமாகி உள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 634 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 47 ஆயிரத்து 880 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உருமாறிய தொற்று

இதேபோல நாக்பூரில் 29 வயது வாலிபர், 54 வயது பெண்ணுக்கு உருமாறிய பி.ஏ.5 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டு தனிமையில் உள்ளனர்.

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 366 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 2 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 10 லட்சத்து 88 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 578 பேர் உயிரிழந்து உள்ளனர்.


1 More update

Next Story