பருவமழைக்கு முன் நகரை அழகுபடுத்தும் பணி நிறைவு பெறும்- மாநகராட்சி கமிஷனர் தகவல்

மும்பையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றது. மீதமுள்ள பணிகள் பருவமழைக்கு முன் முடிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மும்பையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றது. மீதமுள்ள பணிகள் பருவமழைக்கு முன் முடிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாடு
மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் பேசியதாவது:-
மும்பையில் நடத்து முடிந்த ஜி-20 மாநாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு குழு கூட்டத்திற்கு மாநகராட்சி செய்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது. இந்த ஏற்பாடுகள் பிறநகரங்களுக்கு புதிய முன்மாதிரியாக அமைத்து உள்ளது. மாநகராட்சியின் சிறப்பான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் பாராட்டி உள்ளது. இந்த பணி ஜி20-க்கு கவுன்சில் கூட்டத்திற்கு மட்டும் இல்லாமல் அனைத்து கூட்டங்களிலும் தொடர வேண்டும்.
50 சதவீதம் நிறைவு
மும்பையை அழகுபடுத்தும் திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். இந்த திட்டத்தில் முதற்கட்ட பணிகள் 500 இடங்களிலும், இரண்டாம் கட்ட பணிகள் 320 இடங்களிலும் முடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் 50 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று உள்ளது. மீதமுள்ள பணிகள் பருவமழைக்கு முன்பு நிறைவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் புறநகர் கூடுதல் மாநகராட்சி கமிஷனர்கள் வேல்ராசு, அஸ்வினி பிடே, டாக்டர் சஞ்சீவ் குமார் மற்றும் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






