சஞ்சய் ராவத் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க சஞ்சய் ராவத்துக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க சஞ்சய் ராவத்துக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன்
பத்ரா சால் மோசடி வழக்கில் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார். சுமார் 100 நாட்களில் ஜெயிலில் இருந்த அவர், கடந்த புதன்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சஞ்சய் ராவத் மற்றும் பத்ரா சால் மோசடி வழக்கின் மற்றொரு குற்றவாளி பிரவின் ராவத்துக்கு சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடைவிதிக்க செய்யகோரி அமலாக்கத்துறை மும்பை ஐகோர்ட்டில் முறையீடு செய்தது. எனினும் மும்பை ஐகோர்ட்டு நீதிபதி பாரதி டாங்ரே இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்தநிலையில் சஞ்சய் ராவத், பிரவின் ராவத்தின் ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதில் நீதிபதி பாரதி டாங்ரே அமலாக்கத்துறையின் மனு குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்க சஞ்சய் ராவத், பிரவின் ராவத் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இதேபோல அமலாக்கத்துறை தங்கள் மனுவை வருகிற 14-ந் தேதிக்குள் திருத்தம் செய்து தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கினார். மேலும் மனு மீதான விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதற்கு அமலாக்கத்துறை கூடுதல் சோலிசிஸ்டர் ஜெனரல் அனில் சிங், மனு மீதான விசாரணையை 21-ந் தேதியே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். எனினும் நீதிபதி ஒரிரு நாள் தாமதமாக விசாரிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை என கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தார்.






