நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் கடிதம்


நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் கடிதம்
x
தினத்தந்தி 5 Jun 2022 8:58 PM IST (Updated: 5 Jun 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்ம நபர் கடிதம் அனுப்பி உள்ளார். பாந்திரா போலீசில் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

பிரபல இந்திப்பட நடிகர் சல்மான்கான். இவரது தந்தை சலீம்கான். இவர் தனது குடும்பத்துடன் பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றனர். காலை சல்மான் கானின் தந்தை சலீம்கான் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது, அவருடன் சென்ற பாதுகாவலரிடம் மர்மநபர் ஒருவர் கடிதம் ஒன்றை கொடுத்து விட்டு தலைமறைவானார். இந்த கடிதத்தை அவர் சலீம்கானிடம் கொடுத்தார்.

இதனை பிரித்து பார்த்ததில் அவர் உள்பட நடிகர் சல்மான்கானிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று 2 பேரும் கடிதத்துடன் பாந்திரா போலீஸ் நிலையம் வந்தனர். தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கடிதத்தை போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை மிரட்டல் தொடர்பாக நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story