அரசை ஆட்டம் காண்பிக்க நினைப்பவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்- துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் எச்சரிக்கை


அரசை ஆட்டம் காண்பிக்க நினைப்பவர்களுக்கு  பாடம் கற்பிக்கப்படும்-  துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 May 2023 12:30 AM IST (Updated: 16 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வன்முறையை ஏற்படுத்தி அரசை ஆட்டம் கண்பிக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

வன்முறையை ஏற்படுத்தி அரசை ஆட்டம் கண்பிக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

வன்முறை

மராட்டியத்தில் உள்ள அகோலா மற்றும் அகமத் நகர் மாவட்டம் சேவ்காவ் பகுதிகளில் நடந்த வன்முறை குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

அகோலா மற்றும் சேவ்காவில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மாநில உள்துறை மந்திரி தேவேந்திர பட்னாவிசின் அறிவுறுத்தலின் பேரில் மாநில ஊரக வளர்ச்சி துணை மந்திரி கிரிஷ் மகாஜன் அகோலாவுக்கு சென்றார். அதேநேரம் வருவாய் துறை மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சேவ்காவில் நிலைமையை ஆய்வு செய்தார். அகோலா மற்றும் சேவ்காவில் நடந்த கலவரங்களுக்கு பின்னால் உள்ளவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை நான் வலியுறுத்தி உள்ளேன்.

சர்ச்சை பதிவுகள்

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய செய்திகள் அல்லது படங்களை வெளியிட வேண்டாம் என்றும், சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன். பிற சமுதாயத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதை தவிர்க்குமாறு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பட்னாவிஸ் எச்சரிக்கை

இதற்கிடையே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், "மாநில அரசை ஆட்டம் காண்பிக்க சில அமைப்புகள் மற்றும் சிலர் 100 சதவீதம் ஆசைப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story